உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இசைவாணி, ரஞ்சித் மீது நடவடிக்கை தேவை: அகில பாரத இந்து மகா சபா புகார் மனு

இசைவாணி, ரஞ்சித் மீது நடவடிக்கை தேவை: அகில பாரத இந்து மகா சபா புகார் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சினிமா இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தில், 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழு உள்ளது. இதில், கானா பாடகியான இசைவாணி என்பவர், 2019ல் நடந்த இசை நிகழ்ச்சியில், 'ஐ யம் சாரி அய்யப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' எனத் துவங்கும் பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை இப்போது சிலர் டிரெண்ட் செய்ததால், சர்ச்சையாகி வருகிறது.அதாவது, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. இதை விமர்சித்தே பாடலை பாடி உள்ளார். இதனால், ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர் இழிவுபடுத்தி உள்ளார்; அய்யப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதுாறு செய்கிறார் என, பல்வேறு தரப்பிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அகில பாரத இந்து மகா சபா மாநில மகளிர் அணித் துணைத் தலைவர், நிர்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.மனுவில், சமூக வலைதளத்தில் அய்யப்ப பக்தர்களின் மத சிந்தனையையும், விரத கட்டுப்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பாடல் பரவி வருகிறது. இதனால் சமூக ஒற்றுமையும், நல்லிணக்கமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த பாடலை பாடிய இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 21:10

துறையூர் ராஜேந்திரன் இதில் ஏன் அறிவாலயம் வருது? அதுக்கு கொத்தடிமைகள் இருக்கிறார்களா? சென்னை மெட்ரோ சிட்டி தானே? இங்கே நான் வசிக்கும் கொச்சினில் கூட ஒரு கொத்தடிமை கூட கிடையாது. அதென்னவோ, என் வலுவான வாதங்களுக்கு பதில் இல்லாத பாஜக அடிமைகள் தான் தனிமனித தாக்குதல் எழுதறாங்க ன்னு பார்த்தால், அந்த அடிமைகளுக்கே கூட உங்களைப் போன்ற அடிமைகள் இருப்பது கேவலமா இருக்கு. சொந்த புத்தி இல்லாத நீங்கள் எல்லாம் கொத்தடிமை களா அல்லது தெளிவான வாதங்களை முன் வைக்கும் நானா??


J.V. Iyer
நவ 28, 2024 18:14

இந்த பயங்கரவாதி ரஞ்சித்தை தூக்கிவிட்டது வேறு யாரும் அல்ல, ரஜனிகாந்த் அவர்கள்தான். எல்லா சொரியாரிஸ்ட்களுடனும் இவர்களுக்கு கூட்டு.


sugumar s
நவ 28, 2024 15:17

இசைவாணி மற்றும் ரஞ்சித் இத்தாலிக்கு நாடு கடத்தணும்


Bhaskaran
நவ 28, 2024 12:41

சுரணையற்ற காவல்துறை இருக்கும் வரை இனி இதைவிட கேவலமாகவும் பேசுவார்கள்


SIVAN
நவ 28, 2024 11:51

அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், சுவாமி அய்யப்பன் எடுக்கும் நடவடிக்கையை எந்த கொம்பனாலும் தடுக்க வழியில்லை. இதற்கு முன்பு பேசிய நாதாரிகள் என்ன ஆனார்கள் என்று எல்லார்க்கும் தெரியும்.


தவெக மயிலாப்பூர்
நவ 28, 2024 11:30

இது முற்றிலும் இந்துக்களின் ஆன்மீக உணர்வுக்கு எதிரானது. உடனடி நடவடிக்கை அவசியம்.


Naga Subramanian
நவ 28, 2024 10:53

மதச்சார்பற்ற என்ற பெயரில், ஓட்டு வங்கியை குறிவைத்து இயங்கும் கட்சிகள் இருக்கும் வரையில், இந்த மாதிரியான அவலங்கள் மற்றும் அயோக்கியத்தனங்கள் நடக்கத்தான் செய்யும். என்ன செய்வது இந்த மாதிரியான தொன்றுதொட்டு வந்த அவர்களது 52 வருடத்திய சனாதனம் அப்படி அதாவது இந்துக்களையும், குறிப்பாக பிராமணர்களை மட்டுமே குறிவைத்து தரக்குறைவாக பேசுவதையே தொழிலாகக் கொண்ட கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


Sampath Kumar
நவ 28, 2024 10:05

அகில பாரத எஸ்.சி.எஸ் .டீ ,ஒடுக்கப்பட்டோர் பழங்குடியினர் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிப்பு நீதி துறையை கேவலமாக மதிக்கும் ஹிந்து மதத்தை தடை செய் பெண்களை துச்சமாக மதிக்கும் ஐயப்பன் தேவசம் போர்டை உடனடியாக நீக்குக என்று அவர்கள் போராடினால் நிலைமை என்னவாகுமென்று ஆர்யா கும்பல் யோசிக்கணும்


Bala
நவ 28, 2024 10:33

நீதியை விலைகொடுத்து வாங்குவதும் முடியாவிட்டால் கீழே போட்டு மிதிப்பதும் திராவிட மாடல் அரசுதான் . திமுகவை நீதிமன்றத்தில் தடைசெய்யும் அளவுக்கு அவர்களை சார்ந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது நிரூபிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பார்களா?


Naga Subramanian
நவ 28, 2024 10:44

திராவிட 200 ரூபாய் கும்பலுக்கு எவ்வளவு கோபம் பொத்துக்கிட்டு வருது பாருங்கோ சரிங்க, நீங்க சொன்ன மாதிரி செஞ்சுதான் பாக்கட்டுமே இந்துக்கள் பெயரில் ஒளிந்து கொண்டு செயல்படுபவர்கள், தைரியமாகவே நிஜமான பெயரிலேயே பேசலாமே.


ஆரூர் ரங்
நவ 28, 2024 10:53

அப்போ உங்க ஜமாஅத்தில் பெண்களுக்கு முக்கிய பதவி உண்டா? சமத்துவம் உண்டா? பெண்களுக்கு பாதிரியார் ஆக உரிமையுண்டா?


Thiagu
நவ 28, 2024 11:25

அப்பன் வெச்ச சொந்த பெயர் சொல்ல வெக்க படுபவன் ஒரு கும்பல் மட்டுமே


Ganapathy
நவ 28, 2024 12:46

பொணத்தை புதைக்கும் இடத்தில கூட தலித் கிறிஸ்தவமக்களுக்கு சாதிவெறி காட்டி சுவர் எழுப்பும் கிறிஸ்தவர்களை நீ கேள்வி கேட்டமாட்டாய்.


rasaa
நவ 28, 2024 10:04

ஒன்றும் நடக்காது. இஸ்லாமியர், கிருத்துவர்கள் அல்லாதோர் மீதுமட்டும்தான் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 10:02

வீரபாண்டி, அலங்காநல்லூர்க்கு என்ன பிரச்னை? ஓங்கோல், கட்டுமரம், சமச்சீர்.. என்று ஏதேதோ எழுதறார்??? என் வலுவான வாதங்களுக்கு அவரிடம் விளக்கம் ஏதும் இல்லை பாவம். என்மேல தனிமனித தாக்குதல் எழுதறார் பாவம்.


ராஜேந்திரன்,துறையூர்
நவ 28, 2024 14:30

இது கூட புரியலையா அவரு சுருக்கமா நீ ஒரு அறிவாலய கொத்தடிமை என கூறுகிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை