மேலும் செய்திகள்
இறக்குமதி குறித்து கவலை வேண்டாம்
13-Dec-2024
கோவை : சர்வதேச விலைக்கு மூலப்பொருட்கள் கிடைக்க, மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (ஓஸ்மா) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவில், 'சர்வதேச பருத்தி விலையை விட இந்திய பருத்தி விலை, ரூ.14 - 20 வரை அதிகமாக உள்ளது. விஸ்கோஸ், பாலியஸ்டர், செயற்கை நுாலிழை சர்வதேச விலையை விட கிலோவுக்கு, ரூ. 20 - 25 அதிகமாக உள்ளது.இதனால், தமிழகத்திலிருந்து நுால், ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. மத்திய அரசு, சர்வதேச விலைக்கு பருத்தி, பாலியஸ்டர், விஸ்கோஸ் ஆகிய மூலப்பொருட்கள் இந்தியாவில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.பருத்தி மீது விதித்துள்ள, 11 சதவீத இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து பாலியஸ்டர், விஸ்கோஸ் தடையின்றி இறக்குமதி செய்ய, குவாலிட்டி கன்ட்ரோல் ஆர்டர் முறையை நீக்க வேண்டும். வங்கதேச ஜவுளிப் பொருட்கள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
13-Dec-2024