உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் கலெக்டர் பசூரில் ஆய்வு

கூடுதல் கலெக்டர் பசூரில் ஆய்வு

அன்னுார்; பசூரில், 77 லட்சம் ரூ பாய் செலவில், 22 வீடுகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். அன்னுார் ஒன்றியத்தில் நேற்று, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வன் வாகீத் ஆய்வு செய்தார். காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனம் குப்பைகளை மறுசுழற்சி செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் ஊராட்சி சேகரிக்கும் குப்பைகளை அங்கு மறுசுழற்சி செய்ய ஆய்வு செய்தார். இதையடுத்து கரியாம்பாளையத்தில் அரசு மானியத்தில் கட்டப்படும் வீடு, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் செம்மாணி செட்டிபாளையத்தில் 26 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். பசூரில் தலா 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 77 லட்சம் ரூபாய் செலவில் 22 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. அப்பணியை ஆய்வு செய்து பணியை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். கட்டுமானப் பணியின் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வில், செயற்பொறியாளர் சிவநாத், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை