நுாலகத்துக்கு ரூ.22 லட்சத்தில் கூடுதல் கட்டட பணி விறுவிறு
அன்னுார்; நல்லிசெட்டிபாளையம் ஊர்ப்புற நூலகத்திற்கு 22 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது.நல்லிசெட்டிபாளையம் ஊர்ப்புற நூலகம் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய கட்டடம் புத்தகங்கள் வைக்கவும் வாசகர்கள் பயன்படுத்தவும் போதுமானதாக இல்லை. இதனால் கூடுதல் கட்டடம் கட்டித் தர வாசகர்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.இந்நிலையில் மத்திய அரசு, தமிழகத்தில் 824 கிளை நூலகங்களுக்கு தமிழக அரசு வாயிலாக நிதி ஒதுக்கியது. இதில் நல்லி செட்டிபாளையம் நூலகத்திற்கு 500 சதுர அடியில் புதிய கூடுதல் கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.