தனிநபர் கூடுதல் ‛லாக்கர் வசதி; வங்கி தலைமையகத்தில் ஜரூர்
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில், ரூ.1.20 கோடியில் கூடுதலாக தனி நபர் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்துவதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், தேவையின் அடிப்படையில் தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக ஏற்படுத்தப்படும் என, 2025--26ம் ஆண்டு கூட்டுறவு மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். இதன்படி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில், ரூ.1.20 கோடியில் கூடுதலாக, தனி நபர் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிணத்துக்கடவு கிளைக்கு, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது.