வடகோவையில் கூடுதல் நடைமேடை
கோவை; போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் ரூ.24 கோடியிலும், வடகோவை ரயில்வே ஸ்டேஷன் ரூ.15 கோடியிலும் மேம்படுத்தப்படுகின்றன. வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் ரூ.2 கோடியில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கவும், ரூ.9 கோடியில் இருகூர், சிங்காநல்லுார், சோமனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பாரங்களை உயர்த்தவும், பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதன் மூலம், இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் கூடுதல் ரயில்களை நிறுத்த வழி கிடைத்துள்ளது. ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இப்பணிகள் நிறைவடைந்தால், வடகோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். கூடுதலாக ஒரு பிளாட்பாரம் கிடைக்கும்போது ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. வெளிமாநில ரயில்களை நிறுத்த வசதி கிடைக்கும்' என்றார்.