உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

சிறப்பு கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

அன்னுார் ; கோவை மாவட்டத்தில் வரும் 2ம் தேதி 10 ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நவ. 3வது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2023 ஏப். 1 முதல் 2024 மார்ச் 31 வரை நிறைவேற்றப்பட்ட பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2016 முதல் 2022 வரை கட்டப்பட்ட வீடுகள் குறித்த சமூக தணிக்கை செப். 2 முதல் நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் பத்து ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை நடைபெறுகிறது. இந்த வாரம் கடந்த 28ம் தேதி முதல் நவ. 1ம் தேதி வரை சமூகத் தணிக்கை நடைபெறும். நவ. 2ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அன்னுார் ஒன்றியத்தில் வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நஞ்சுண்டாபுரம், சூலூர் ஒன்றியத்தில் கணியூர், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் குமாரபாளையம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நவ. 2ம் தேதி நடைபெற வேண்டிய கிராமம் கூட்டம், நவ. மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை