உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய தலைமுறையினரை உருவாக்கும் அத்வைத் தாட் அகாடமி

நாளைய தலைமுறையினரை உருவாக்கும் அத்வைத் தாட் அகாடமி

கோவை : தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றத்திற்கு ஏற்ப எதிர்கால சவால்களை சமாளிக்கும் பல்திறன்களுடன், நாளை தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில், கோவை அத்வைத் தாட் அகாடமி செயல்பட்டு வருகிறது.அத்வைத் தாட் அகாடமி பள்ளியின் தாளாளர் ரவி சாம் கூறியதாவது:மாணவர்களைச் சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் எங்கள் பள்ளி செயல்படுகிறது. இயற்கை சூழலில், அனைத்து வசதிகளுடன் கூடிய மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அனுபவம் மிகுந்த ஆசிரியர்களைக் கொண்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி இப்பள்ளி இயங்குகிறது.வாசிப்புத்திறன், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி புலமை, பேச்சாற்றல் போன்றவற்றில் துவக்கம் முதலே கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், ஜே.இ.இ., நீட்., போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.கல்விக்கு இணையாக, யோகா, ஸ்கேட்டிங், செஸ், கராத்தே, நடனம், சிலம்பம், இசைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நுாலகம், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாணவர்களின் மத்தியில் சமூக சிந்தனைகளை வளர்க்கும் விதமாக சிறுதுளி, சாலைப் பாதுகாப்பு இயக்கம், உயிர், குட்டிகாப்ஸ் போன்ற அமைப்புகள் நடைமுறையில் உள்ளன. முழுமையான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உலகத் தரத்திலான கல்வி வழங்கப்படுகிறது.தொலைநோக்குப் பார்வையில் சவால்களை எதிர்கொள்ளும் அனைத்துத் திறன்களுடன் சமூக சேவையாற்றும் மனப்பான்மை உடைய மாணவர்களை உருவாக்கும் விதத்திலும் பள்ளியின் செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் ஒவ்வொருவரும் சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் செயலாக்கம் செய்ய வேண்டும் என்பதே எமது பள்ளியின் பிரதான கோட்பாடாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை