அவினாசிலிங்கம் நிறுவனத்தில் அட்வைதா - 2025 நிகழ்ச்சி
கோவை : தேசிய அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப கருத்தரங்கு நிகழ்வு 'அட்வைதா-2025' என்ற பெயரில், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்தது. இக்கருத்தரங்கை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகித்து துவக்கி வைத்தார். 'ஈடுபாடு, புதுமையான சிந்தனை மற்றும் குழுவுடன் ஒருங்கிணைந்த செயல்பாடு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்' என்பதை வலியுறுத்தி, அவர் பேசினார். இதில், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள், கருத்தரங்கு அமர்வுகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், சக பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.