மேலும் செய்திகள்
போட்டி ஆணைய விதிமுறை மீறிய ஸ்விக்கி, சொமாட்டோ
09-Nov-2024
அனைத்து நிறுவனங்கள், கடைகளின் பெயரை முதலில் தமிழில் எழுத வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் காயத்ரி அறிக்கை:கோவை, தொழிலாளர் கூடுதல் கமிஷனர் சாந்தி மற்றும் இணை கமிஷனர் லீலாவதி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, உதவி கமிஷனர் தலைமையில், மாவட்டம் முழுதும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தொழிலாளர் நல சட்டங்களை மீறிய, 250 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.மறு முத்திரையிடப்படாத எடை அளவுகள், எடை குறைவு, சோதனை எடைக்கற்கள் இல்லாதது தொடர்பாக, 32 கடைகள்; அதிகபட்ச சில்லறை விற்பனையை விட கூடுதல் விலைக்கு விற்பனை, விலை பட்டியல் தொடர்பாக, 7 கடைகள்; குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நிறுவனங்கள், கடைகள் தங்களது பெயர்ப் பலகையில் முதலில் தமிழில் எழுத வேண்டும். பின்னர் ஆங்கிலம், அவரவர் விரும்பும் பிற மொழிகளில் பெயர்ப்பலகைகளை வைத்துக் கொள்ளலாம்.புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை labour.tn.gov.in/ism என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை 1098 என்ற எண்ணிலும், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் புகார்களை 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. -- நமது நிருபர் --
09-Nov-2024