உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்புக்கு அறிவுறுத்தல்

மழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்புக்கு அறிவுறுத்தல்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் பலரும், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மழை மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ப கால்நடைகளை பராமரிக்க, விவசாயிகள் இடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. கால்நடைத்துறையினர் கூறியதாவது: மழை பொழிவின்போது, கால்நடைகள் சரியாக மேயாது. புதிதாக முளைத்த புற்களோடு களைகளையும் சாப்பிடுவதால், கழிச்சல் நோய் வரலாம். இதற்கு, அவ்வப்போது மாடுகளுக்கு தானியங்களையும், அடர்தீவனங்களையும் அளிக்க வேண்டும். சோளத்தட்டு, வைக்கோல் போன்றவற்றை முன்னதாகவே சேமித்து வைத்து கொடுக்கலாம். கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால், பெரும்பாலான நோய்கள் பரவுவதும் தடுக்கப்படும். நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், கால்நடை டாக்டரின் ஆலோசனைப் பெற்று, மருந்து அளிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை