உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காம்ப்ளக்ஸ் உரங்கள் விவசாயிகளுக்கு அறிவுரை

காம்ப்ளக்ஸ் உரங்கள் விவசாயிகளுக்கு அறிவுரை

பெ.நா.பாளையம்; கோவை மாவட்ட விவசாயிகள் டி.ஏ.பி., உரத்துக்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் நல்ல பருவமழை பெய்துள்ளது. விவசாயிகள் அதிக அளவில் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா, 2,845 மெ.டன், டி.ஏ.பி., 676 மெ.டன், பொட்டாஷ், 2,046 மெ.டன், காம்ப்ளக்ஸ், 3,532 மெ.டன், சூப்பர் பாஸ்பேட், 1,560 மெ. டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னை மரத்துக்கு நீரில் கரையக்கூடிய வெள்ளை பொட்டாஷ் உரத்தை இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி., விலை அதிகமாக உள்ளதால், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேளாண்துறை, விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ