உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் அக்ரி ஹேக்கத்தான்

வேளாண் பல்கலையில் அக்ரி ஹேக்கத்தான்

கோவை; வேளாண் பல்கலைக் கழகத்தின் பயிர் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் மையத்தில், 'அக்ரி ஹேக்கத்தான் 2025' கருத்தரங்கு நடந்தது.பதிவாளரும், தற்காலிக துணைவேந்தருமான தமிழ்செல்வன், அக்ரி ஹேக்கத்தான் போன்ற நிகழ்வுகள், விவசாய சமூகத்தின் மேம்பாட்டுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என விளக்கினார். இந்த அக்ரி ஹேக்கத்தான், தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, விவசாயிகளுக்கு தெளிவான மேம்பாடுகளை உறுதி செய்யும் சிறந்த தீர்வுகளை செயல்படுத்த பயன்படும். கருத்தரங்கில், உயிரியல் மற்றும் உயிர்த்தகவல் உயிரியல் துறை பேராசிரியர் அருள், பேராசிரியர்கள், முதன்மையர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !