உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேளாண் விரிவாக்க மையம் இடமாற்றம்

 வேளாண் விரிவாக்க மையம் இடமாற்றம்

தொண்டாமுத்துார்: தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்த வேளாண்மை விரிவாக்க மையம், தொண்டாமுத்தூர் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொண்டாமுத்துார் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சக்திவேல் அறிக்கை: தொண்டாமுத்துார் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு, மானிய விலையில், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தின் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தொண்டாமுத்தூர், வ.உ.சி. வீதியில் உள்ள,பழைய பேரூராட்சி அலுவலக கட்டடத்திற்கு வேளாண்மை விரிவாக்க மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு,அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை