உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சக்தி கல்லுாரியில் வேளாண் திருவிழா

ஸ்ரீ சக்தி கல்லுாரியில் வேளாண் திருவிழா

கோவை; ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், எட்டாவது வேளாண் திருவிழா இரண்டு நாள் நிகழ்வுகள் நாளை துவங்குகிறது. 5ம் தேதி நிறைவு பெறுகிறது.வேளாண்மை, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை கொண்டாடவும், விவசாயிகள், பொதுமக்கள், தொழில்முனைவோருக்கு பயன்படும் வகையிலும் இத்திருவிழா பன்முகத்தன்மையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாட்டு மாடுகள், காளை மற்றும் நாய் கண்காட்சிகள் சிறந்த எருமை, காங்கேயம் காளை, கிடாரி போட்டிகள், சேவல் கண்காட்சி, ரேக்ளா ரேஸ், குதிரை பந்தயம், கலாசார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் ஓர் இடத்தில் நடைபெறவுள்ளது.100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நேரடி தயாரிப்புகள், சேவைகள் அடங்கிய கண்காட்சி, இடம்பெற்றுள்ளது. காலை, 6:00 மணி முதல் இரவு வரை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.மேலும், மருத்துவ தாவரங்கள், மூலிகை தோட்டக்கலை குறித்த கருத்தரங்கும் நடைபெறவுள்ளது. விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் நோக்கில் பிரத்யேக மையம் ஒன்று துவங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், பங்கேற்கவும், மேலும், விபரங்களை அறியவும், 77082 68947, 99440 72718 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை