உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம்

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் ஒவ்வொரு பகுதியாக நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி -தலைமை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்மணி நகரில், இன்று காலை, 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. முகாமில் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள், அலுவலர்களுடன் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம். முகாமில் டிராக்டர், பவர்டில்லர், களையெடுக்கும் கருவி, டிரோன் போன்ற வேளாண் இயந்திரங்கள் காட்சிபடுத்தப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், பழுதுகளை கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை