விவசாய செய்தி
பொள்ளாச்சி,; தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரும்பு வயல்களில், குருத்து மாவுப்பூச்சி, மற்றும் குருத்து முறுக்கல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வுகாணும் வகையில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு அபிவிருத்தி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த, 2007-08ல் ஏறத்தாழ 9 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு பயிரிடும் பரப்பு, தற்போது 2.2 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு விவசாயிகளின் நிகர வருமானத்தில் குறிப்பிட்ட உயர்வு இல்லை. கரும்பு வயல்களில் தற்போது காணப்படும் பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் கரும்பு சாகுபடி சார்ந்த ஆர்வத்தை விவசாயிகள் மத்தியில் குறைத்துவிடும்.பெரம்பலுார் போன்ற சில மாவட்டங்களில் பல கரும்பு வயல்களில் குருத்து மாவுப் பூச்சி மற்றும் குருத்து முறுக்கல் காரணமாக, 40 - 80 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.தமிழ்நாடு தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைவர் சில்வெஸ்டர் கோல்ட்வின், கரும்பு இனப்பெருக்க முதன்மை விஞ்ஞானி புத்திரபிரதாப், பல்வேறு சர்க்கரை ஆலைகளின் கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள் பங்கேற்றனர்.