உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயல்விளக்க திடல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

செயல்விளக்க திடல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி; கிணத்துக்கடவு வட்டாரத்தில் எள், நிலக்கடலை செயல்விளக்கத் திடலை, விதைப் பண்ணைகளாக அமைக்க, வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், சோளம், கம்பு, கொள்ளு, தட்டைப்பயறு, உளுந்து, கொண்டைக்கடலை, நிலக்கடலை உள்ளிட்டவை தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.அவ்வகையில், நிலக்கடலையில் அதிக மகசூல் தரக்கூடிய, 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட ரகங்களான 'கதிரி லேபாக்டி 1812', 'பவானி சாகர் 2', 'திண்டிவனம் 14' மற்றும் எள் பயிரில், 'திண்டிவனம் 4', 'விருதாச்சலம் 7' போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.அதன்படி, 2.5 ஏக்கர் பரப்பில் எள் மற்றும் நிலக்கடலையில் செயல்விளக்கத்திடல் அமைக்க, தேசிய எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் 50 சதவீதத்தில் மானிய விலையும் வழங்கப்படுகிறது.மேலும், நிலக்கடலை, எள் பயறுவகை மற்றும் தானியங்களில் அதிக மகசூல், மண்ணில் வளத்தினை காக்கவும், நுண்ணுாட்டக் கலவைகள், உயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கவும் வேளாண் துறையால் இலக்கு பெறப்பட்டுள்ளன.இந்நிலையில், எள், நிலக்கடலை செயல்விளக்கத் திடலை, விதைப் பண்ணைகளாக அமைக்க, ஆய்வும் நடத்தப்படுகிறது. துணை வேளாண்மை அலுவலர் மோகனசுந்தரம், விதை உற்பத்தி அலுவலர் உதயகுமார், வேளாண்மை உதவி அலுவலர் மெகபூத்பாஷா, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் திட்ட தொழில் நுட்ப உதவியாளர் சூர்யபிரகாஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை