களப்பயிற்சியில் வேளாண் மாணவியர்
பொள்ளாச்சி; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு இளநிலை வேளாண் மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, 'கிராமப்புற விவசாய பணி அனுபவம்' என்ற தலைப்பில், விவசாயம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்லும் அவர்கள், பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, மண்ணுார் பகுதிக்கு சென்று, கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல், முதன்மை செயல் அலுவலர் சரவணன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். அதன் வாயிலாக, தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள், தகவல்கள் அறிந்து கொண்டனர்.