உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

மேட்டுப்பாளையம்: அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு, வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வேளாண் அறிவியல் பாடப்பிரிவில், மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து, விவசாயிகள் தோட்டத்தில் நேரடியாக பயிற்சியும், செயல் விளக்கமும் அளிக்கப்படுகிறது. சிறுமுகையை அடுத்த சம்பரவள்ளிபுதூரில் உள்ள இயற்கை விவசாயி விசுவநாதன் தோட்டத்தில், காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியர் களப்பயிற்சியில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள், மண்ணின் வளம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மண்புழு உரங்கள் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பது குறித்து, இயற்கை விவசாயி விசுவநாதன் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வேளாண் அறிவியல் ஆசிரியை மலர்விழி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி