உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாசனை திரவியம் தயாரிக்க வேளாண் பல்கலை ஒப்பந்தம்

வாசனை திரவியம் தயாரிக்க வேளாண் பல்கலை ஒப்பந்தம்

கோவை; கோவை, வேளாண் பல்கலையில் உள்ள காக்ஸ்பிட், வாசனைத் திரவியங்களை உருவாக்குவதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வேளாண் பல்கலையில், உயிரி தொழில் நுட்ப மகத்துவ மையம் - காக்ஸ்பிட் அமைந்துள்ளது. பல்கலை, ஆராய்ச்சி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இடையே அறிவுசார் தொழில்நுட்பங்களைக் பகிர்தல், உயிர் தகவலியல், மரபியல், மூலக்கூறு கண்டறிதல், மரபணு தனிமைப்படுத்தல், உயிரணு வளர்ப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இம்மையம் சார்பில் கோவையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நிவேதிதா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூலிகைகள் மற்றும் தாவர மூலக்கூறுகளின் அடிப்படையில் வாசனைத் திரவியங்களை உருவாக்கும் பணிக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வாசனைத் திரவிய துறையில் மதிப்பூட்டல் உள்ளிட்ட செயல்பாடுகளை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது. பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், காக்ஸ்பிட் இயக்குநர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை