உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தஞ்சை உயராய்வு மையத்தில் வேளாண் பல்கலை மாணவர்கள்

தஞ்சை உயராய்வு மையத்தில் வேளாண் பல்கலை மாணவர்கள்

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, பி.டெக்., வேளாண் பொறியியல் மாணவர்கள், தஞ்சையில் உள்ள, பெரியார் மணிய ம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள உயிரி ஆற்றல் உயராய்வு மையத்தை பார்வையிட்டனர். இங்கு, இந்தியாவின் முதல் 500 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட, பன்மூல உயிரிவாயு உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இது, உயிரி கழிவுகளில் (பயோ வேஸ்ட்) இருந்து 60 கிலோவாட் மின்னாற்றலை உருவாக்குகிறது. இந்த ஆலையில் உருவாகும் செரித்த சாணக்கரைசல், மண்புழு உரம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. அனுபவ கல்வியாக இதை பார்வையிட்ட மாணவர்கள், இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிற பசுமை முயற்சிகளையும் பார்வையிட்டனர். பயன்படுத்தப்பட்ட தேர்வுத்தாள்கள், மறுசுழற்சி வாயிலாக புதிய கோப்புகளாக மாற்றப்படுவது, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைப் பயன்படுத்தி, பாசனம் செய்யப்படும் 10 ஏக்கர் பரப்பு கொண்ட மூங்கில் காடு ஆகியவற்றை பார்வையிட்டு விளக்கம் பெற்றனர். இப்பயணத்தை டீன் ரவிராஜ், பேராசிரியர்கள் ராமச்சந்திரன், திவ்யாபாரதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி