மேலும் செய்திகள்
தேனீ வளர்க்கலாம் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு
20-Jun-2025
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, மானிய விலையில் சோளம் வழங்க தயார் நிலையில் உள்ளது, என, வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும், 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு சோளம் வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.தற்போது, ஆனி மற்றும் ஆடி பட்டம் துவங்கியுள்ளது. தற்போது 'கே12' ரக சோளம் விதை (உயர் விளைச்சல் ரகம்) 1,500 கிலோ இருப்பு உள்ளது. இது பாசன நிலம் மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.இது, 5 முதல் 6 அடி வரை வளரக்கூடியது. இதை தானியமாகவும், தீவனமாகவும் பயன்படுத்தலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 30 கிலோ வழங்கப்படும். இதே போன்று நுண்ணூட்டச்சத்து, 1,500 கிலோ இருப்பு உள்ளது. இது, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண்துறை உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.
20-Jun-2025