உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க., - ஐ.டி., விங் ஓர் அணி, ஒரே நோக்கம்

அ.தி.மு.க., - ஐ.டி., விங் ஓர் அணி, ஒரே நோக்கம்

கோவை; சமூக வலைத்தளங்களில், அ.தி.மு.க., - ஐ.டி., விங் களமாட ஆரம்பித்திருக்கிறது. ஐ.டி., விங் உறுப்பினர்களுக்கு 'ஸ்பிரின்ட் மீட்' என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை முன்னெடுப்பது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:தேர்தல் நெருங்கும் சமயத்தில் சமூக ஊடகங்களின் பங்கு முக்கியமானது. ஐ.டி., விங்கில் உள்ள அனைவரும் ஓரணி - ஒரே நோக்கம் (ஒன் டீம் ஒன் மிஷன்) என்ற அடிப்படையில் இ.பி.எஸ்., முதல்வராக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.மண்டல, மாவட்ட, தொகுதி வாரியாக ஐ.டி., விங் செயல்பாடுகளை ஊக்குவித்து, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.தி.மு.க., ஆட்சியின் தவறுகளையும், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் தொடர்ச்சியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை