இதயதெய்வம் மாளிகையில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
கோவை: அ.தி.மு.க.,சார்பில், தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்கான பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.கோவை இதய தெய்வம் மாளிகையில் நடந்த கூட்டத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆலோசனைகளை வழங்கினார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, விடுபட்ட வாக்காளர்களைச் சேர்த்தல், கட்சியின் கடந்த கால சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, தி.மு.க., எதிர்ப்பை அ.தி.மு.க.,வுக்கான ஓட்டுகளாக மாற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.