மேலும் செய்திகள்
நீர், மோர் பந்தல் திறப்பு
18-Apr-2025
வால்பாறை, ; எஸ்டேட் பகுதியில் பூத் கமிட்டி அமைப்பதில் அ.தி.மு.க.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம், 69 பூத்கள் உள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், புதிய பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி துவங்கியது. வால்பாறை நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில், வார்டு வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி நடந்தது.வால்பாறை நகர், மானாம்பள்ளி, முடீஸ், உருளிக்கல், ேஷக்கல்முடி, முருகாளி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகளை, கோவை புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.நிகழ்ச்சியில், தொழிற்சங்க தலைவர் அமீது, நகர துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், அவைத்தலைவர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
18-Apr-2025