உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெப்பர் ஸ்பிரே வழங்கிய அ.தி.மு.க.வினர்

பெப்பர் ஸ்பிரே வழங்கிய அ.தி.மு.க.வினர்

போத்தனூர்: கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு, அ.தி.மு.க.- - பா.ஜ.- - த.மா.கா. உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மதுக்கரை நகர அ.தி.மு.க. செயலாளர் சண்முகராஜா தலைமையில் கட்சியினர் நேற்று காலை சுந்தராபுரம், அய்யர் ஆஸ்பத்திரி பஸ் ஸ் டாப்களில் காத்திருந்த பெண்களுக்கும், பஸ்சில் பயணித்தவர்களுக்கும், பெப்பர் ஸ்பிரே வழங்கினர். சிட்கோ மேம்பாலம் அடுத்துள்ள தனியார் கல்லூரி முன்பாகவும் வழங்கினர். சண்முகராஜா கூறுகையில், தற்போதைய ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனை கண்டித்தும், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும், பெப்பர் ஸ்பிரே 800 பேருக்கு வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் வழங்குவோம், என்றார். மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை