மேலும் செய்திகள்
வீரபாண்டியில் ஜெ., பேரவை திண்ணை பிரச்சாரம்
06-Jul-2025
கோவை; கோவை கோர்ட் வாசல் முன், அ.தி.மு.க.,வக்கீல் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுசெயலா ளர் பழனிசாமியை வரவேற்கும் வகையில், வக்கீல் அணி சார்பில், கோவை ஒருங்கிணைந்த வளாகம் முன் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். நேற்று காலையில் அந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்ததை பார்த்து, அ.தி.மு.க., வக்கீல்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து, மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் ஐ.கணேசன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர்கள் தாமோதரன், சந்திரசேகர் ஆகியோர், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, கோர்ட் முன் 'சிசிடிவி' காட்சிகளை பார்த்து விசாரித்து வருகின்றனர்.
06-Jul-2025