உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க எழுச்சி பயணம்

அ.தி.மு.க எழுச்சி பயணம்

மேட்டுப்பாளையம்; அ.தி.மு.க.,வின் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணம் மேட்டுப்பாளையத்தில் துவங்குகிறது. இதையொட்டி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று காலை, 8:00 மணிக்கு வனபத்ரகாளி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடுகிறார். மாலை, 3:00 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே எழுச்சி பயணத்தை துவக்கி வைக்கிறார்.4:00 மணிக்கு காரமடை, 5:00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பின்பு துடியலூரிலும் எழுச்சி பயண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை