உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவியருக்கு வெளிச்சம் தரும் அகல் விளக்கு திட்டம்

மாணவியருக்கு வெளிச்சம் தரும் அகல் விளக்கு திட்டம்

கோவை; அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவியருக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'அகல் விளக்கு' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும். தற்போது இத்திட்டம் பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆறு வாரங்களில், சைபர் வன்முறை, சைபர் குரூமிங், சைபர் ஸ்டாக்கிங், பட மார்பிங், அலைபேசிக்கு அடிமையாதல் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மறைத்தல் ஆகிய தலைப்புகளில், மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக, 'அகல் விளக்கு' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சிற்றேடுகள் மற்றும் காணொளிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை 9ம் வகுப்பு, செவ்வாய்கிழமை 10ம் வகுப்பு, புதன்கிழமை 11ம் வகுப்பு, வியாழக்கிழமை 12ம் வகுப்பு மாணவியருக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை