'மதுப்பழக்கம் மட்டுமே கல்லீரல் பிரச்னைக்கு காரணமாக கூறமுடியாது; உணவு பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன்.அவர் கூறியதாவது:உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் இருந்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பது கல்லீரல்தான். தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி கொழுப்பை சேமித்து வைத்து, தேவைப்படும்போது உடலுக்கு சக்தி கொடுக்கிறது. இவ்வாறு சேமிக்கும் கொழுப்பாலேயே கல்லீரலுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.உடலில் சேரும் கொழுப்பை தொடை, இடுப்பு, வயிறு என பல்வேறு உறுப்புகளுக்கு கல்லீரல் பிரித்து அனுப்பி சேமித்து வைக்கிறது. உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால், கல்லீரல் களைத்துப்போகும். கொழுப்பை பிரித்து வெளியில் அனுப்பாமல் தன்னிடமே வைத்துக்கொள்ளும்.கொழுப்பு அதிகமாக சேரும்போது, கல்லீரல் வீங்கும். மது பழக்கம் இல்லாதவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், உடல் பருமன், சர்க்கரை பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, தைராய்டு, துாக்கமின்மையாலும், அன அழுத்தத்தாலும், சில ஹார்மோன்கள் அதிகளவில் சுரந்து, கல்லீரலில் கொழுப்பு சேர்கின்றன.கல்லீரல் பிரச்னைக்கு ஆரம்ப நிலையில் அறிகுறி இருக்காது. முற்றிய நிலையில், சோர்வு, மயக்கம், வலது மேற்புற வயிற்றில் வலி, கால்கள், வயிறு வீக்கம், பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை, உடல் அரிப்பு, எடை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.ரத்தம், ஸ்கேன், கல்லீரல் என்சைம் பரிசோதனைகள், கல்லீரல் பயோப்ஸி உள்ளிட்டவற்றால், பாதிப்பின் அளவை தெரிந்து சிகிச்சை பெறலாம்.எடையை கட்டுக்குள் வைத்திருப்பது; சர்க்கரையை சீராக வைத்திருப்பது; தினமும் நடைபயிற்சி; பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள், முளைகட்டிய பயிறுகள் என எல்லாம் கலந்த சரி விகித ஆரோக்கிய உணவு உட்கொள்ளுதல்; வறுத்த இறைச்சி, துரித உணவுகள், நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்; இரவில் போதுமான துாக்கம் இவற்றை கடைபிடித்தால் கல்லீரல் பாதிப்பை தடுக்கலாம்.கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு, கே.எம்.சி.எச்.,ல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சிகிச்சைக்கு தேவையான அதிநவீன கருவிகள், வசதிகள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.'மதுப்பழக்கம் மட்டுமே கல்லீரல் பிரச்னைக்கு காரணமாக கூறமுடியாது; உணவு பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன்.அவர் கூறியதாவது:உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் இருந்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பது கல்லீரல்தான். தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி கொழுப்பை சேமித்து வைத்து, தேவைப்படும்போது உடலுக்கு சக்தி கொடுக்கிறது. இவ்வாறு சேமிக்கும் கொழுப்பாலேயே கல்லீரலுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.உடலில் சேரும் கொழுப்பை தொடை, இடுப்பு, வயிறு என பல்வேறு உறுப்புகளுக்கு கல்லீரல் பிரித்து அனுப்பி சேமித்து வைக்கிறது. உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால், கல்லீரல் களைத்துப்போகும். கொழுப்பை பிரித்து வெளியில் அனுப்பாமல் தன்னிடமே வைத்துக்கொள்ளும். கொழுப்பு அதிகமாக சேரும்போது, கல்லீரல் வீங்கும். மது பழக்கம் இல்லாதவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், உடல் பருமன், சர்க்கரை பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, தைராய்டு, துாக்கமின்மையாலும், அன அழுத்தத்தாலும், சில ஹார்மோன்கள் அதிகளவில் சுரந்து, கல்லீரலில் கொழுப்பு சேர்கின்றன.கல்லீரல் பிரச்னைக்கு ஆரம்ப நிலையில் அறிகுறி இருக்காது. முற்றிய நிலையில், சோர்வு, மயக்கம், வலது மேற்புற வயிற்றில் வலி, கால்கள், வயிறு வீக்கம், பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை, உடல் அரிப்பு, எடை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.ரத்தம், ஸ்கேன், கல்லீரல் என்சைம் பரிசோதனைகள், கல்லீரல் பயோப்ஸி உள்ளிட்டவற்றால், பாதிப்பின் அளவை தெரிந்து சிகிச்சை பெறலாம். எடையை கட்டுக்குள் வைத்திருப்பது; சர்க்கரையை சீராக வைத்திருப்பது; தினமும் நடைபயிற்சி; பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள், முளைகட்டிய பயிறுகள் என எல்லாம் கலந்த சரி விகித ஆரோக்கிய உணவு உட்கொள்ளுதல்; வறுத்த இறைச்சி, துரித உணவுகள், நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்; இரவில் போதுமான துாக்கம் இவற்றை கடைபிடித்தால் கல்லீரல் பாதிப்பை தடுக்கலாம்.கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு, கே.எம்.சி.எச்.,ல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சிகிச்சைக்கு தேவையான அதிநவீன கருவிகள், வசதிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.