மேலும் செய்திகள்
சதம் அடித்தது ஆழியாறு அணை
21-Jun-2025
பொள்ளாச்சி; ஆழியாறு அணை நீர்மட்டம், 118.30 அடியாக உயர்ந்ததால், விவசாய பயன்பாட்டுக்காக உபரிநீர் திறந்து விடப்பட்டது.பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு அணை, 76 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பரப்பு கொண்டது. அணையில், 3,864 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். மொத்தம், 120 அடி உயரமுள்ள அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர், ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தேவைக்காக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.நடப்பாண்டு, பருவமழை கை கொடுத்ததால் அணை நீர்மட்டம் மெல்ல உயர்ந்தது.கடந்த, ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த, 21ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது.கடந்த, 3ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, நீர்மட்டம் 115.20 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 118.30 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 787 கனஅடி நீர் வரத்து இருந்தது. ஆற்றில், 650 கனஅடியும், கால்வாயில் 76 கனஅடி என, மொத்தம், 731 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.அணை முழு கொள்ளளவை எட்டும் சூழலில், உபரிநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில், விவசாய பயன்பாட்டுக்கு கால்வாய் மற்றும் ஆறு வாயிலாக திறக்கப்பட்டது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஆழியாறு அணையில், 120 அடியில், 118.30 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டுக்காக கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
21-Jun-2025