கொடிசியா ஷாப்பிங் திருவிழாவில் அனைத்தும் ஓரிடத்தில் வாங்கலாம்
கோவை; கொடிசியா சார்பில், கொடிசியா வணிக வளாகத்தில், ஷாப்பிங் கண்காட்சி நடந்து வருகிறது. வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில், 380 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கிச்சன் அப்ளையன்ஸ், பர்னிச்சர், ரெடிமேட் ஆடைகள், காலணிகள், சிறுதானிய உணவு பொருட்கள், பித்தளை, பஞ்சலோக பரிசு பொருட்கள், சாமி சிலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள், கைவினை பொருட்கள் என, அனைத்தும் காட்சிக்கு வைத்துள்ளனர். குழந்தைகளுக்கான கேம்ஸ், நீர் விளையாட்டு, போட்டிங், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. மாலையில் இசை, நடனம், மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளன.கண்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'இங்கு எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால், தேவையான பொருட்களை வாங்கி செல்ல முடிகிறது; விலையும் குறைவாக இருக்கிறது' என்றனர்.கண்காட்சியை பார்வையிட, 50 ரூபாய் கட்டணம். வரும் ஜன., 1 ம் தேதி வரை காலை, 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.