மேலும் செய்திகள்
பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு
17 minutes ago
போலி நகை அடகு வைத்து மோசடி; இருவர் கைது
4 hour(s) ago
51 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
7 hour(s) ago
பிரமாண்டமான கேரளா பர்னிச்சர் மேளா
7 hour(s) ago
கோவை: இந்திய ஜவுளி சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில், 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோவையில் வரும் 21ம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. இது தொடர்பாக, இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் சத்தியநாராயணா, மாநாட்டு அமைப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது: அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ஸ் அண்ட் கலரிஸ்ட்ஸ் உடன் இணைந்து மாநாடு நடத்தப்படுகிறது. 'உலகளாவிய ஜவுளி: வாய்ப்புகளை அகழ்ந்தெடுத்தல்' என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டை, எல்.எம்.டபிள்யூ., தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு துவக்கி வைக்கிறார். முக்கிய தொழில் அமைப்புகளின் தலைவர்கள், ஜவுளித் துறை நிபுணர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என துறை சார்ந்த அனைத்துப் பிரிவில் உள்ள நிபுணர்களும் இந்தியாவில் ஜவுளித் துறையின் எதிர்காலம், திட்டங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள், ஆட்டோமேஷன் என பல்வேறு துறைகள் குறித்தும் விரிவாக அலசுகின்றனர். சர்வதேச நிபுணர்களும் பங்கேற்று பேசுகின்றனர். இந்த மாநாட்டில், பல்லவா குழுமத்தின் செயல் இயக்குநர் துரை பழனிசாமி, எல்.எஸ். மில்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் ஆகியோருக்கு தொழில்துறை மகத்துவ விருது வழங்கப்பட உள்ளது. மாநாட்டில், நாடு முழுதும் இருந்து 600க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இந்திய ஜவுளிச் சங்கத்தின் கோவை செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
17 minutes ago
4 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago