உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்யலாம் ! மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்யலாம் ! மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

பொள்ளாச்சி;''பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தங்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் ஆய்வகத்தில் செய்து கொள்ளலாம்,'' என, மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 1.9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, விபத்து சிகிச்சை பகுதி மற்றும், 1.25 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆய்வகத்தை, கடந்த, 9ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார்.இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் விபத்துக்கு பிறகு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவசரப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின், இந்த வார்டில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம், 15 படுக்கைகள் கொண்ட இந்த வார்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.ஒருங்கிணைந்த ஆய்வகத்தில், நேற்று முதல் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் செயல்படும் வேதியியல், நுண்ணுயிர் கிருமிகள் பரிசோதனை ஆய்வகம், காசநோய் ஆய்வகம் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆய்வகம் என அனைத்தும் ஒரே இடத்தில் செயல்பட துவங்கியுள்ளது.அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள், வேறு, வேறு இடத்திற்கு செல்லாமல், தங்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை மற்றும் அனைத்து பரிசோதனைகளையும், இந்த ஆய்வகத்தில் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ