உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு

அன்னுார்; அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்தனர். அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 1974- 75ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அன்னுார் ஐ.டி.ஐ., வளாகத்தில் நடந்தது. இதில் முன்னாள் ஆசிரியர்கள் வேலுச்சாமி, ராமசாமி, கதிர்வேல், அல்லிமுத்து ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், அண்ணாமலை பொறியியல் கல்லுாரி சேர்மனுமான கார்த்திகேயன் பேசுகையில், ''முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு உதவ முடிவு செய்துள்ளோம்,'' என்றார். ஐ.டி.ஐ., தாளாளர் தங்கவேல், கேரளா, கர்நாடகா, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து முன்னாள் மாணவர்கள் 40 பேர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். மகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். பலர் பேரக் குழந்தைகளுடன் வந்திருந்தனர். விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை