மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
12-May-2025
அனுபவங்களை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்
14-May-2025
கோவை, ; அரசு பாலிடெக்னிக்கில், நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.அரசு பாலிடெக்னிக்கின், 1997 - 2000 கல்வியாண்டில் பயின்ற, முன்னாள் மாணவர்கள் இச்சந்திப்பை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மவுன அஞ்சலி, விளக்கேற்றுதல், கல்லூரி நினைவுகளை வெளிப்படுத்தும் குறும்படம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மரக்கன்றுகள் நடுதல், குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்காத முன்னாள் மாணவர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துரையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் நலன், கல்லூரி வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நிதி திரட்டப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட பழைய மாணவர் சங்கமான ஜி.பி.டி., முன்னாள் மாணவர் சங்கத்தின் மூலம் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 224 முன்னாள் மாணவர்கள், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
12-May-2025
14-May-2025