மேலும் செய்திகள்
என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
02-Apr-2025
வால்பாறை; வால்பாறையில் உள்ள, அம்மா உணவக ஊழியர்களுக்கு, தினக்கூலியாக, 500 ரூபாய் வழங்க வேண்டுமென, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில், 12 பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உணவகத்தில் காலை நேரத்தில் இட்லி, மதியம் சாம்பார், வழங்கப்படுகிறது.காலை, 6:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக, 325 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணியரும் உணவத்துக்கு அதிகம் வருகின்றனர்.இந்நிலையில், அம்மா உணவக ஊழியர்களுக்குகுறைவான கூலி வழங்கபடுகிறது. குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. அதனால், தினக்கூலியை உயர்த்தி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது: தினமும், ஒன்பது மணி நேரம் பணி செய்கிறோம். மக்களுக்கு சிறந்த முறையில் காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் வழங்குகிறோம். அம்மா உணவகத்துக்கு அதிகப்படியான மக்கள் வருகின்றனர்.எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 443 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனால், அம்மா உணவக பணியாளர்களுக்கு, வேலைப்பழு மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தினக்கூலியாக, 500 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
02-Apr-2025