அண்ணா பல்கலை விளையாட்டு ஸ்ரீ சக்தி கல்லுாரி சாம்பியன்
கோவை :அண்ணா பல்கலை 9வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில், நீலாம்பூர் ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: கல்லுாரி மாணவர்கள் இன்ஜினியரிங் துறையில் மட்டுமின்றி, விளையாட்டு துறையிலும் பல தொடர் சாதனைகளை செய்து வருகின்றனர். அண்ணா பல்கலையின் 2024-2025ம் ஆண்டின், 9வது மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில், சக்தி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, 590 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். சென்னை அண்ணா பல்கலையில் நடந்த விழாவில், பல்கலை பதிவாளர் பிரகாஷ், தொழில்நுட்ப இயக்குனர் இன்னோசென்ட் திவ்யா பரிசளித்தனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.