மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Apr-2025
நெகமம்: நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா நாளை, 8ம் தேதி நடக்கிறது.நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நாளை, 8ம் தேதி நடக்கிறது. இதில், காலை 5:00 மணிக்கு, மங்கள இசையை தொடர்ந்து, கலச பூஜைகள் மற்றும் மூலமந்திர ஹோமம் நடக்கிறது.அதன்பின், காலை 6:30 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், காலை 7:35 மணிக்கு மேல், சுவாமி திருக்கல்யாண வைபவம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
06-Apr-2025