பள்ளியில் ஆண்டுவிழா உற்சாக கொண்டாட்டம்
கோவை: ஒத்தக்கால் மண்டபம், டாக்டர் வி கெங்குசாமி நாயுடு பள்ளியில், ரவீந்திரன் கெங்குசாமி கலையரங்கம் திறப்பு விழா மற்றும் 35வது ஆண்டு விழா நடந்தது. சிந்தனை கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடஸ்ரீ , ஆண்டறிக்கை வாசித்தார். பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், விளையாட்டு, கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்வுகளை அரங்கேற்றி மாணவர்கள் அசத்தினர். பள்ளி தாளாளர் ரவீந்திரன், செயலாளர் நந்தினி, ஹர்ஷவர்தன், சம்ஹிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.