உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கலைநிகழ்வுகளுடன் ஆண்டுவிழா கோலாகலம்

 கலைநிகழ்வுகளுடன் ஆண்டுவிழா கோலாகலம்

கோவை: சிங்காநல்லுார், ஜி.வி.கே. வித்யா மந்திர் மற்றும் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. ஜி.ஆர்.ஜி., கல்வி நிறுவனங்கள் மற்றும் சந்திரா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் நந்தினி, கே.ஜி., குழும டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்சின் இணை இயக்குனர் சஞ்சனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். ஜி.வி.கே., வித்யா மந்திர் பள்ளியின் தகவல் கையேட்டைக் நந்தினி வெளியிட, பள்ளியின் தாளாளர் சுனிதா பெற்றுக் கொண்டார். பள்ளி முதல்வர் வத்சலா கடந்த கல்வியாண்டின் சாதனைகளையும், நிகழ்வுகளையும் விளக்கும் ஆண்டு அறிக்கையை வாசித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் முதல் மற்றும் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், வழி நடத்திய ஆசிரியர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.கண்கவர் கலை நிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர். பள்ளியின் செயலர் சந்திரகாந்தி, துணை முதல்வர் மல்லிகா தேவி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை