மேலும் செய்திகள்
போலீஸ் அடையாள அட்டை காண்பித்து திருட்டு முயற்சி
15-Sep-2025
வடவள்ளி; கோவை, கஸ்துாரிநாயக்கன்பாளையம், சபரி அவென்யூவை சேர்ந்தவர் செந்தில் குமார், 40. 'சிசி டிவி' கேமரா பொருத்தும் பணி செய்கிறார். 12ம் தேதி, செந்தில்குமார் வீட்டில் தனியாக இருந்த போது, புகுந்த இருவர் போலீஸ் என கூறி, கொள்ளையடிக்க முயன்றனர். வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி, கோவையை சேர்ந்த கார்த்திக், விஷ்ணுகுமார், ஜிம்சன், சந்தோஷ் பாரதி என்ற பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடிக்க முயன்றததை கண்டுபிடித்தனர். 18ம் தேதி, விஷ்ணு குமார், கார்த்திக், ஜிம்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூரில் தலைமறைவாக இருந்த சந்தோஷை நேற்று கைது செய்தனர். இன்னும் தலைமறைவாக உள்ள பாரதியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
15-Sep-2025