கோவை - பெங்களூருவுக்கு மேலும் ஒரு வந்தேபாரத்?
கோவை: பெங்களூருவுக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வருகிறது. இதை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிர்வாகம், கோவை - பெங்களூரு, கோவை வழியாக எர்ணாகுளம் - பெங்களூரு என, இரு வந்தேபாரத் ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால், தேவை அதிகம் உள்ளதால் பெங்களூருவுக்கு இரவு நேர வந்தேபாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. சேலம் கோட்ட ரயில்வே துறையும், தேவையை கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயிலை இரவு இயக்க வேண்டும் என்பதற்கான கருத்துருவை, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியுள்ளதகவும், விரைவில் ரயில்வே வாரியம் அனுமதி வழங்க உள்ளதாகவும், ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.