உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி

கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி

பொள்ளாச்சி; கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் பரிந்துரை செய்துள்ளது.வேளாண் கால நிலை மையத்தின் அறிக்கை வருமாறு:கால்நடைகளுக்கு போதிய சுத்தமான நீரை பருக கொடுக்க வேண்டும். இப்போதைய பருவநிலை, கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவலுக்கு வாய்ப்பளிக்கக்கூடும்.குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில், நோய் பரவக்கூடும் என்பதால், அருகிலுள்ள கால்நடை மருத்துமனைகளில், தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. சாதகமான பருவநிலை நிலவுவதால், சோளம் சாகுபடி செய்யலாம். அதற்காக நிலத்தை தயார் செய்யலாம். பாசனம் பெறும் பகுதிகளில், நிலக்கடலை விதைக்கலாம்.விதைகளை நேர்த்தி செய்து, பயன்படுத்த வேண்டும். கரும்பைப் பொறுத்தவரை, நிலத்தைப் பண்படுத்தி முன்கூட்டிய நடவு மேற்கொள்ளலாம். மேட்டுப்பாங்கான பாத்தியில் கத்தரி நடலாம். மரவள்ளியைப் பொறுத்தவரை, இலைப்புள்ளி நோய் தென்பட வாய்ப்பிருப்பதால் மான்கோசெப் மருந்தை, 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !