உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல்

கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், கத்தரி செடிகளில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதியில் ஆண்டுதோறும், 75 ஏக்கர் பரப்பளவில் கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், ஒரு சில இடங்களில், கத்தரி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதைத் தவிர்க்க, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதில், டைநொட்டாபியூரான், 1.7 கிராமை, 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது டைமீத்தோயேட், 10 மில்லியை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வந்தால் தத்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ