மேலும் செய்திகள்
பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் நியமனம்
10-Oct-2025
அன்னூர்: பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., அறிவுசார் பிரிவு மாநிலச் செயலாளராக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரிவின் மாநில தலைவர் கோவர்த்தனன் இந்நியமனத்தை அறிவித்துள்ளார். அரசு தொடர்பு பிரிவு கோவை வடக்கு மாவட்ட செயலாளராக சாந்தமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை இப் பிரிவின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் கணேசன் அறிவித்துள்ளார். அன்னூர் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த துரை குமார், ஓ.பி.சி., அணியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி அறிவித்துள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து தெரிவித்தனர்.
10-Oct-2025