மேலும் செய்திகள்
அரசு பணிக்கான ஆணை வழங்கல்
21-Sep-2024
கோவை, : கோவையில் சிவா வடிப்பகத்தில் கலால் மேற்பார்வையாளராக பணிபுரியும் துணை கலெக்டர் துரைமுருகன், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இதற்கு முன் பணியாற்றிய சிவகுமாரி, சிவா வடிப்பக கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக முன்னாள் மாவட்ட மேலாளர் அம்சவேணி, கோவை கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) நியமிக்கப்பட்டிருக்கிறார்.கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனராக இருந்த சந்திரா, நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) மாற்றப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.
21-Sep-2024