நியமனம்
வால்பாறை: வால்பாறை ம.தி.மு.க., தொழிற்சங்க நகர செயலாளராக இருப்பவர் கல்யாணி. சென்னையில் நடந்த, கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.இதில் வால்பாறையை சேர்ந்த கல்யாணி, தொழிற்சங்கத்தின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். புதிய மாநில செயலாளருக்கு, தொழிற்சங்க வால்பாறை பொது செயலாளர் பெருமாள், துணை பொதுசெயலாளர் அன்பழகன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர்.