உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளருக்கு பாராட்டு

துாய்மை பணியாளருக்கு பாராட்டு

கோவை : மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காதது என துாய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று, தரம் பிரித்து சேகரிக்கின்றனர்.நேற்று மத்திய மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட சங்கனுார், தயிர் இட்டேரி சாலை குடியிருப்பு பகுதியில் துாய்மை பணியாளர் ரேவதி, குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அவ்வழியே சென்ற கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், துாய்மை பணியாளரின் சிறந்த பணியை பாராட்டினார்.தொடர்ந்து, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், பதிவாளரும், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரும், ரேவதிக்கு சால்வை அணிவித்து பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை